திருமா – தமிழ் ஈழம் அங்கீகார மாநாடு. முன்னுரை.

•December 23, 2008 • 1 Comment

வரும் 26ம் தேதி… தமிழ் ஈழ்த்துக்கும்.. ஒவ்வொரு தனி ஈழ தமிழனுக்கும்… நல்ல நாளாக அமையலாம்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு தலைவர் திருமா அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள “தமிழ் ஈழம் அங்கீகார” மாநாட்டை எதிர் நோக்கி ஒவ்வொரு வீரத்தமிழனும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கிறான். தமிழகத்தில்.. குறிப்பாக சென்னையில் இப்போதுள்ள அரசியல் சூழலில்.. காங்கிரஸ் போன்ற கட்சிகள் திருமாவை கைது செய்ய சொல்லி வற்புறித்துவதால்.. மாநாடு சிறப்பாக நடப்பதில் உள்ள சிக்கல்கள் ஏராளம். தமிழக காவல் துறையும் இது போன்ற தருணத்தில் போதுமான பாதுகாப்பு.. மற்றும் ஆதரவு தராது என்பது வருத்தத்திற்கு உரிய விடயம்.

வரும் 26ம் நாள், நான் சென்னையில் இருக்கிறபடியால்.. இந்த மாநாட்டை முழுவதுமாக படமாக்கவே விரும்புகிறேன். பிரசினை ஏதும் இராது என்ற நம்பிக்கையுடன் களத்தில் இறங்கவே திட்டமிட்டுள்ளேன். அது நடந்தால்.. அந்த புகை படங்கள் உங்கள் பார்வைக்கும்.. இங்கே… வரும்.

காத்திருங்கள்… வாழ்த்தி அனுப்புங்கள்.

~பெ.வெ.

Advertisements

உண்ணாநிலை போராட்டம்…

•December 16, 2008 • Leave a Comment

சென்ற வாரம் வெள்ளி.. சனி.. ஞாயிறு… என தொடர்ந்து மூன்று நாட்கள், தகவல்தொடர்பு துறையில் பணி புரியும் நண்பர்கள் பலர்.. என் அருமை சகோதரன் ஈழ தமிழனின் நலம் பேண.. உண்ணாநிலை போராட்டம் செய்தனர்.

முதல் நாளில் பத்து.. இருபது என வந்த தோழர்கள்… கடைசி நாளில் 250 என கூட்டமாக சேர்ந்து போராட்டம் செய்ததாக நண்பர் லட்சுமணராசா தெரிவித்தார். வைகோ.. நெடுமாறன் அய்யா.. சுபவீ.. கல்யாணி… திருமா.. சீமான்.. தாமரை… என எல்லா தமிழ் ஆதரவாளர்களும் வந்து வாழ்த்தியதை பெருமிதத்துடன் சொன்ன போது, நான் தவற விட்ட வாய்ப்பை நினைத்து வருத்தபடுகிறேன்.

சில புகைபடங்கள் இங்கே… நன்றி: லட்சுமணராசா


மேலும் படங்கள்…

என் தமிழனுக்காக.. நானும் போராடுவேன். நண்பர்கள் விழைந்தால்… பெங்களூரில் அப்படி ஒரு உண்ணாநிலை அறப் போராட்டத்தை நடத்தவே…. பங்கு பெறவோ விரும்புகிறேன்.
நண்பா தயாரா?

~பெ.வெ.

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?

•November 26, 2008 • 1 Comment

இன்று, நவம்பர் 26, மாவீரர் நாள்.
1954ல், இதே தினத்தில், என் மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த நாள்.
தம்பி என்று அழைக்கப்படும் இந்த அண்ணனை ஒவ்வொரு ஈழ புலியும் தரிசிக்கும் நாள்.
36 வருடங்களாக தனி தமிழ் நாடு கேட்டு போராடி வரும் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவன் பிறந்த நாள்.
உரிமையையும்.. உடைமையையும்.. இழந்து வாடும்.. வாழும் ஒவ்வொரு தமிழனுக்குமான நாள்.

இன்றும் இந்த மாவீரன்…
இந்த உலகத்தை பார்த்து…
தனி தமிழ் ஈழம் வேண்டுமென்று…
இறைஞ்சி விண்ணப்பிக்க கூடும்…

என்று தனியும் இந்த சுதந்திர தாகம்?
என்று விடியும் எம் தமிழனின் வாழ்வு?

என் பாரதியை போல…
ஆடுவோமே பள்ளு பாடுவோமே…
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்…

என்று என் ஈழ தமிழனும் விரைவில் பாடவேண்டும்.

அந்த நாளை என் வாழ்வில் நான் கண்டு களிப்பேனா?

~பெ.வெ.
பி.கு: புகைபடம். நன்றி ஆர்த்தி இராசா.

நான்காவது தூண்?

•November 13, 2008 • 2 Comments

சென்னை மாநகரின் இதய பகுதியில் உள்ளது சென்னை உயர் நீதிமன்ற வளாகம். அதை ஒட்டியுள்ளது… நாளைய நான்காவது தூண்களை உருவாக்கும் டாக்டர் அம்பேத்கர் சட்ட கல்லூரி. தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் இக்கல்லூரிக்கு எப்பொழுதும் போலவே இப்பொழுதும் போறாத காலம். 117 ஆண்டு கால வரலாறு கொண்ட இந்தியாவின் பழமையான இக்கல்லூரி உருவாக்கிய சட்ட வல்லுனர்கள் எத்தனை எத்தனை ஆயிரம். ஆனால்…

இப்பொழுது நடப்பது என்ன.. நடந்தது… என்ன?
ஒரு தேர்வு தினத்தில்…. மாணவர்களிடையே கோஷ்டி மோதல். சாதி வெறி அடங்காத மாணவர்களுக்குள் பிரச்சனை. ஒருவன் கையில் கத்தி. இன்னொருவன் கையில் உருட்டுக்கட்டை. வேறொருவன் பேருந்தை கொளுத்துகிறான். மற்றொருவன் தரையில் இரத்த வெள்ளத்தில்…. இவர்கள் நாளைய இந்தியாவின் நான்காவது தூண்கள். ஆம்… நான்காவது தூண்கள் நடு தெருவில் பொறுக்கித்தனம் செய்துகொண்டு.

என்ன செய்யவில்லை… செய்ய வேண்டும்…?
சட்ட கல்லூரிக்குள் சட்டம் தன் கடமையயை செய்யவில்லை. நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்திருக்கிறது அரசு. அடி உதை வாங்கிய மாணவர்கள் ஆஸ்பத்திரியிலும்…. அடி உதை கொடுத்தவர்கள் பத்திரமாக கம்பிக்கு பின்னாலும் இருப்பது போதாது. இவர்களின் சட்ட கல்லூரி சீட்டுக்கள் கிழிக்கப்பட வேண்டும். மற்ற எல்லா கல்லூரிகளிளும் சீட்டு மறுக்கப்பட வேண்டும்.

படிக்காமல்.. வேலை இல்லாமல் தெருவில் பரதேசிகளாக அலைந்தாலும் பரவாயில்லை… நாளைய.. என் சமுதாயத்திற்கு.. இவர்கள் சட்டம் இயற்றத் தேவையில்லை.
அதை டாக்டர் அம்பேத்கர் கூட மன்னிக்க மாட்டார்.

மற்றவை… உங்களுக்காக… எழுதுங்கள்.

~பெ.வெ.

திருமணம் என்கிற “வெட்டி”ங்…

•November 11, 2008 • 1 Comment

வீட்ட கட்டி பாரு… கல்யாணத்த பண்ணிப்பாருனு….
சும்மாவா சொன்னாங்க அந்த காலத்துல.

சரி விடயத்துக்கு வருவோம்.
என் உயிர் நண்பன் ஒருவனின் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன் சிறப்பாக நடந்தது. ஒரு திருமணத்தில் இன்னின்ன சிக்கல்… சிரமம்.. செலவு.. மகிழ்ச்சி.. பொறுப்பு போன்றவை உள்ளன என்பதை மிக நெருக்கமாக பார்த்து.. அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

எது தேவை.. எவை எல்லாம் தேவை இல்லை.. எது அத்தியாவசியம்.. எது அனாவசியம்… சில (மூட)பழக்கங்கள், சில வழக்கங்கள்… மாறாத சட்டங்கள்… மாற மறுக்கும் மனிதர்கள் என சிலவற்றை இங்கே கோடிட்டு காட்ட விரும்புகிறேன். நான் நாத்திகம் பேசுகிறேன் என்று சிலர் என் கருத்துக்களை மறுக்கக் கூடும். இருந்தாலும்… இங்கே சில….

எவை…. தேவை இல்லை...
1. ஆண்.. பெண்.. அம்மா.. அப்பா.. சொந்தங்கள் நண்பர்கள் என எல்லோரும் இருக்கும் போது.. புரியாத மந்திரங்கள் சொல்லும் புரேகிதர் தேவை இல்லை.
2. மொய்… பொய்… தேவை இல்லை.
3. அம்மி மிதித்து அக்னி சாட்சியாக அருந்ததி பார்க்க தேவை இல்லை.
4. ஆல்பம் போடுகிறேன் பேர்விழி என்று நடுநிசி வரை புகைபடம் எடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ள தேவை இல்லை.
5. எல்லாரும் வரும் நாளை விட்டு… நல்ல நாள் என காலண்டரில் நாள் பார்த்து… வார நாட்களில் கல்யாணம் தேவை இல்லை.
6. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு, முன்னால் இருப்பவர் தலையில் மட்டும் அட்சதை போடும் ஆசீர்வாதம் தேவை இல்லை.
7. கடவுள் தூணிலும் துறும்பிலும் இருப்பாரானால்… கல்யாணம் முடித்த கையேடு கோயில் குளம் என அலைச்சல் தேவை இல்லை.

எவை…. தேவை…
1. எல்லாருக்கும் புரியும் படியான தமிழ் வழி ஆசீர்வாதங்கள்.. பேச்சுக்கள்..
2. கல்யாணம் முடித்து அதை பதிவு செய்ய வேண்டும் என்ற நல் எண்ணங்கள்.
3. அலைச்சல் இல்லாத அமைதியான, அப்பா அம்மா தாலி எடுத்து கொடுக்கும்… சீர்திருத்த கல்யாணங்கள்.

சரி… இத்துடன் நான் நிறுத்துகிறேன். மற்றவை நீங்கள் எழுத….

~பெ.வெ.

பூனைகுட்டி ஏன் பெண்குட்டியை விட சிறந்தது?

•June 28, 2008 • 2 Comments

நண்பி ஒருவர் அனுப்பிய மெயிலில் இருந்து சிறு துளிகள் இங்கே.
தமிழாக்கம் மட்டும் தான் என்னுடையது. பத்தே.. பத்து வரிகள்…

1. பூனை குட்டிக்கு.. ரிமோட்னா என்னன்னே தெரியாது.
2. பூனை குட்டி, தான் சாவர வரைக்கும் உன்னை லவ்வடிக்கும்.
3. பூனை குட்டிகிட்ட… நீ லவ்வுடரன்னு சொல்லவே வேணாம்.. அதுக்கே புரியும்.
4. பூனை குட்டி காலைல உன்ன சமைக்க சொல்லாது.
5. பூனை குட்டி பொய் சொல்லாது… சண்டை போடாது.. காரி துப்பாது.
6. பூனை குட்டி தண்ணி அடிக்காது… தம் கட்டாது… கஞ்சா வுட்டுக்காது.
7. பூனை குட்டிகிட்ட நீ அழகாகீரன்னு பொய் சொல்ல வேணாம்.
8. பூனை குட்டி, நாலு நாளைக்கு நீ குளிக்கலன்னாலும் ஒண்ணும் சொல்லாது.
9. பூனை குட்டி, சம்பள கணக்கு கேக்காது.
10. பூனை குட்டிக்கு… அதோட அம்மாவுக்குனு… யாருக்கும்.. எந்த விஷேஷத்துக்கும்…. எந்த பரிசும் வாங்கி தர வேணாம்.

சில பூனை குட்டி படஙகள் மட்டும்..
cat
tiger family

புடுச்சி இருந்தா பிண்ணூட்டம் பண்ணுங்க..

பெ.வெ.

அன்னை என்பவள்…

•May 12, 2008 • 2 Comments

அம்மா தான் எல்லாம்.. மத்ததெல்லாம் சும்மா… அப்படின்னு.. விவேக் ஒரு படத்துல வசனம் பேசுவார். மாதவன் நடித்த ரன் படம்னு நினைக்கிறேன். காமெடிக்காக அந்த வசனம் வைக்கப்பட்டு இருந்தாலும்… 100% உண்மையான சொல் அது.

சென்ற வாரம் பெங்களூர் இன்பென்டரி சாலையில் யாருக்காகவே காத்துக் கொண்டு இருந்தபோது தான் கண்ணில் பட்டது இந்த காட்சி. மனதாலும், உடலாலும், முடியாத தன் மகனை ஒரு வெய்யில் நாளில் தன் முதுகில் சுமக்கும் தாய்..

mother is always a mother... (by peevee@ds)

தாய் மட்டும் அல்ல அவள்..
அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்துக்கள்.