திருமணம் என்கிற “வெட்டி”ங்…
வீட்ட கட்டி பாரு… கல்யாணத்த பண்ணிப்பாருனு….
சும்மாவா சொன்னாங்க அந்த காலத்துல.
சரி விடயத்துக்கு வருவோம்.
என் உயிர் நண்பன் ஒருவனின் திருமணம் இரண்டு நாட்களுக்கு முன் சிறப்பாக நடந்தது. ஒரு திருமணத்தில் இன்னின்ன சிக்கல்… சிரமம்.. செலவு.. மகிழ்ச்சி.. பொறுப்பு போன்றவை உள்ளன என்பதை மிக நெருக்கமாக பார்த்து.. அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
எது தேவை.. எவை எல்லாம் தேவை இல்லை.. எது அத்தியாவசியம்.. எது அனாவசியம்… சில (மூட)பழக்கங்கள், சில வழக்கங்கள்… மாறாத சட்டங்கள்… மாற மறுக்கும் மனிதர்கள் என சிலவற்றை இங்கே கோடிட்டு காட்ட விரும்புகிறேன். நான் நாத்திகம் பேசுகிறேன் என்று சிலர் என் கருத்துக்களை மறுக்கக் கூடும். இருந்தாலும்… இங்கே சில….
எவை…. தேவை இல்லை...
1. ஆண்.. பெண்.. அம்மா.. அப்பா.. சொந்தங்கள் நண்பர்கள் என எல்லோரும் இருக்கும் போது.. புரியாத மந்திரங்கள் சொல்லும் புரேகிதர் தேவை இல்லை.
2. மொய்… பொய்… தேவை இல்லை.
3. அம்மி மிதித்து அக்னி சாட்சியாக அருந்ததி பார்க்க தேவை இல்லை.
4. ஆல்பம் போடுகிறேன் பேர்விழி என்று நடுநிசி வரை புகைபடம் எடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ள தேவை இல்லை.
5. எல்லாரும் வரும் நாளை விட்டு… நல்ல நாள் என காலண்டரில் நாள் பார்த்து… வார நாட்களில் கல்யாணம் தேவை இல்லை.
6. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு, முன்னால் இருப்பவர் தலையில் மட்டும் அட்சதை போடும் ஆசீர்வாதம் தேவை இல்லை.
7. கடவுள் தூணிலும் துறும்பிலும் இருப்பாரானால்… கல்யாணம் முடித்த கையேடு கோயில் குளம் என அலைச்சல் தேவை இல்லை.
எவை…. தேவை…
1. எல்லாருக்கும் புரியும் படியான தமிழ் வழி ஆசீர்வாதங்கள்.. பேச்சுக்கள்..
2. கல்யாணம் முடித்து அதை பதிவு செய்ய வேண்டும் என்ற நல் எண்ணங்கள்.
3. அலைச்சல் இல்லாத அமைதியான, அப்பா அம்மா தாலி எடுத்து கொடுக்கும்… சீர்திருத்த கல்யாணங்கள்.
சரி… இத்துடன் நான் நிறுத்துகிறேன். மற்றவை நீங்கள் எழுத….
~பெ.வெ.
எழுத்தும், கருத்தும் தொடரட்டும் 🙂