சிறகு இல்லாத குருவியும், சிந்திய வியர்வையும்.
சென்ற வார விடுமுறையின் போது… பட்டுக்கோட்டைக்கு போயிருந்தேன். இந்த பயணத்தின் போது எதிர்பாராமல்/எதிர்பார்த்து நிகழ்ந்த/இழைத்த இரண்டு தவறுகளின் பட்டியல் இங்கே.
1. நண்பனின் ஊருக்கு போன இடத்துல.. சும்மா இருக்காமல்… குருவி படம் பார்க்கலாம்னு முடிவு செஞ்சது முதல் தவறு. சத்யராஜ் மலபார் போலிஸ் படத்துல சொன்ன மாதிரி, “ஆப்பு என்பது யாரும் யாருக்கும் வைப்பது அல்ல… அது இருக்கும் இடத்தை தேடிச்சென்று நமக்கு நாமே வைத்துக் கொள்வதுனு”. நூறு சதம் உண்மை. விஜய் – த்ரிஷா – தரணி – வித்யாசாகர் – கோபிநாத் கூட்டணியில் சிறகுகள் வெட்டப்பட்டு… மசாலா தடவி… எண்ணையில் இட்டு… வேகாமல் பொரித்து எடுத்த… பறக்கவும் முடியாத… உணவுக்கும் பயன்படாத அரை வேக்காட்டு குருவி. பாவப்பட்டது உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல, ஒன்றும் அறியாத ரசிகர் கூட்டமும் தான்.
2. அக்னி நட்சத்திரம் தொடங்குவது தெரிந்தும்.. தமிழ்நாட்டுக்கு பயணித்தது இரண்டாவது தவறு. ரொம்ப நாளாகவே மகேந்திரன் அவங்க வீட்டுக்கு வருமாறு அழைத்ததன் விளைவு இந்த பயணம். முதல் நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே கழித்திருந்தும், இரண்டாம் நாள் செய்த தஞ்சை மற்றும் திருச்சி விஜயம் எங்களை வாட்டி வறுத்து எடுத்தது வேறுகதை. எவ்வளவோ சொல்லியும் காலை 6 மணிக்கு படுக்கையை விட்டு எழாமல், 12 மணி வெயிலில் பிரகதீஸ்வரர் கோயில் பிரகாரத்தினுள் வெறுங்காலுடன் நடந்து வியர்வை சிந்த வைத்த புகைபடத்துறையை சாராத (Non-Photographers) நண்பர்களுடன் பயணம் செய்தது சோகக்கதை.
மேலே சொன்ன விசயங்கள் கசந்தாலும், நான் மேற்க்கொண்ட இந்த பயணம்… அழகான.. பதிவு செய்யப்பட வேண்டிய.. ஒரு மைக்ரே சிறுகதை. விரைவில் எழுதுவேன். நீங்களும் உங்கள் கருத்துக்களை எழுதலாம்.
ஆகா!!
சீக்கிரம் எழுதுங்க அண்ணாச்சி!!
மி த வெய்ட்டிங்.. 😉