பூம்பாரை…

இந்திய வரை படத்தில் ஒரு புள்ளி என்று சொல்லும் அளவுக்கு கூட இல்லாத ஒரு மைக்ரோ மலை கிராமம். கொடைக்கானல் நகரின் மத்தியில் இருந்து சரியாக இருபது கிமி தொலைவில்… மாசு மறுவற்ற.. மண் மனம் மாறாத..மலை பிரதேசம்.

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமம் தான் என்றாலும்.. இவ்வளவு அழகாக இது நாள் வரை ஒரு கிராமத்தை பார்த்ததில்லை. மலையும் மலைசார்ந்த இடங்களையும் தன் ஊடே கொண்டு, பனியும்.. குளிரும்… மேகங்கள் தவழும்… சொர்க்கபுரி அது.

poomparai

சரி.. விஷயத்துக்கு வருவோம்.
எங்களுடைய கொடைக்கானல் பயணத்தின் இரண்டாம் நாள், பூம்பாரை கிராமத்தை சுற்றி பார்ப்பது என்று முடிவு செய்து, காலை ஒன்பது மணி அளவில் காரில் புறப்பட்டோம். கொடைக்கானல் நகரில் ஒரு சில இடங்களை பார்த்துவிட்டு பூம்பாரை நோக்கி விரைந்தோம். வழி நெடுக இரண்டு புறங்களிலும் பைன் காடுகள், வாசம் நிறைந்த யுகளிப்டஸ் மரங்கள், என எல்லாம் கடந்து மதிய உணவிற்கு ஒரு ரோட்டோர கடையில் நிறுத்தினோம்.

அந்த சாலை வழியாக பயணிக்கும் இரண்டு பேருந்துக்களையும்.. அதில் பயணம் செய்பவர்களையும் மட்டுமே நம்பி நடத்தப்படும் உணவகம் என்று தெரிந்த போது ஆச்சரியமாக இருந்தாலும்… அந்த பாண்டியன் உணவகத்தின் முதலாளி பாண்டியன் அவர்களின் நம்பிக்கையை பாராட்டி தான் ஆகா வேண்டும். சிறிது நேர காத்திருப்புக்கு பின்… நாங்கள் உட்கார்ந்து சாப்பிட இடம் கிடைத்தது. கொடைக்கானலில் இருந்த மூன்று நாட்களில் நாங்கள் சாப்பிட்ட அருமையான முழு சாப்பாடு, அது, வெறும் இருபத்தி இரண்டு ரூபாய்க்கு.

எங்கள் கார் டிரைவர் அறிவுரித்தியபடி, மதிய உணவு முடிந்து, அங்கிருந்து குறுக்கு வழியில் நடந்தே சென்று பூம்பாரை கிராமத்தை அடைவதென்று முடிவு செய்தோம். ஆடு மாடு மனிதர்கள் என எல்லோரும் பயன்படுத்தும்… அது… ஒரு குறுகலான சின்னஞ்சிறிய பாதை. ஸ்டெப் பார்மிங் என்று சொல்லப்படுகின்ற அடுக்கு முறை விவசாயம் தான் எல்லாம். எல்லா காலங்களிலும் அந்த சீதோஷ்ண நிலைக்கு விளைய கூடிய கார்ட், உருளை கிழங்கு மற்றும் பூண்டு தான் அவர்களின் பிரதான பயிர் வகைகள். வழி நெடுக பச்சை பசேல் என்று பயிர்களை தாண்டி கிராமத்தை அடைந்தோம்.

ஆளுக்கு ஒரு காமிரா உடன் சென்ற எங்களை ஊர் பெருசுகள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் வித்தியாசமாக பார்த்தபோது ஒருவித சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாலும், அதை எல்லாம் ஓரம் வைத்து, அவர்கள் அனைவரையும் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தோம். சிம்ரன்கலும்… சினேகாக்கலும்.. தோற்றுப்போவார்கள்… அத்தனை அழகான குழந்தைகள், அந்த சிற்றூரில். இந்த சிறுவர்கள் எல்லாம்.. பூம்பாரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படிப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் விடுமுறை என்றும் அவர்களிடம் பேசியதில் தெரிந்தது. சில பெரியவர்கள், அவர்கள் செய்யும் பூண்டு விவசாயம் பற்றி கொடுத்த தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.

politics

smiles

பிறகு, சிறுவர்கள், ஊர் மையத்தில் இருக்கும், பழனி தண்டயுதபாணி கோயிலுக்கு உட்பட்ட, ஒரு முருகன் கோயிலுக்கு கூட்டிச் சென்றனர். சிறிய கோயில், ஆனால் அழகான கோயில். ஆண்டு தோறும் இந்த கிராமத்துவாசிகள், லட்ச கணக்கில் பணம் செலவு செய்து திருவிழா செய்வது வழக்கமாம். அங்கும் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு, பூம்பாரையை விட்டு புறப்பட்டு.. மீண்டும் கொடைக்காணல் நோக்கி தொடங்கியது எங்கள் பயணம்.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.

~ பெ.வெ (peevee)

Advertisements

~ by peeveeads on April 19, 2008.

6 Responses to “பூம்பாரை…”

 1. படங்கள் எல்லாம் பட்டையக்கெளப்புது அண்ணாச்சி!!!
  கலக்கி போடுங்க…..

  ///சிம்ரன்கலும்… சினேகாக்கலும்.. தோற்றுப்போவார்கள்… அத்தனை அழகான குழந்தைகள்////
  சிம்ரன் சினேகா எல்லாம் குழந்தைகளா??இல்லை அழகிகளா??
  இரண்டுமே கிடையாதே…. :P(அப்பாடா!! வந்ததுக்கு கொளுத்தி போட்டாச்சு..:D)

 2. […] குழந்தைகளின் படங்கள் அருமை… […]

 3. Brilliant shots and a lovely layout ….. Arumai ….. am sending you an contact request in Flickr …..

 4. //சிம்ரன் சினேகா எல்லாம் குழந்தைகளா??இல்லை அழகிகளா??
  இரண்டுமே கிடையாதே…. :P(அப்பாடா!! வந்ததுக்கு கொளுத்தி போட்டாச்சு..:D)//
  சிவிஆர் அண்ணா…
  கொலுத்தி போடரதையே ஒரு பொழப்பா வச்சிருக்கீங்க.
  நான்.. சிம்ரன் சினேகா எல்லாம் குழந்தைகளா இருந்தப்போ.. இவ்வளவு அழகா இருந்து இருக்கமாட்டாங்கன்னு சொல்ல வந்தன்…

  சரி விடு…

 5. நன்றி ராம். பிளிக்க்ர் அனுப்புங்க.
  நன்றி கில்லி.

 6. i realy happay with your poombarai trip
  i am real poombarai citizen thank you very much .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: