மகேன் (MahendraPhotography) பார்வையில் தமிழ் சினிமா…

நீண்ட நாட்களாக பிளிக்கர் மூலமாக மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த மகேனை(mahen) சந்திக்கும் வாய்ப்பு நேற்று ரெட்புல் (redbull) புண்ணியத்தில் கிடைத்தது. நன்றி ரகு.

மகேனின்.. ஒரு படம்.. இங்கே.. உங்கள் பார்வைக்கு…
) have great Holi

இரவு ஒன்பது மணி அளவில் மகேனை அவரது வீட்டில் சந்தித்தோம். குறைந்தது இரண்டு மணி நேரமாவது பேசிக்கொண்டு இருந்த்திருப்போம் என நினைக்கிறேன். புகைப்படம்… கிரிக்கெட்.. சினிமா.. இசை.. நண்பர்கள்.. தமிழ்.. கன்னடம்.. விளம்பரம்.. வடிவேலு.. ஆண்சல் அடம்ஸ்.. மணிரத்னம்.. இப்படி பேசிய தலைப்புகள் ஏராளம்.

மகேன் தமிழ் சினிமா பற்றி பேசியது எனக்கே ஆச்சரியம் அளிப்பதாய் இருந்தது. என்ன ஆச்சரியம்.. என்று நீங்கள் கேட்பது என் காதுகளில் விழாமல் இல்லை.

மகேன் பெங்களூரில் பிறந்து.. மைசூரில் வளர்ந்த.. மங்களூர் வாசி. துளு மொழியில் மிக பிரமாதமாக பேசகூடிய ஒரு கன்னடத்து ஆள். கன்னட சினிமா படங்களுக்கு ஸ்ட்டில் புகைபட கலைநர். அவர் தமிழ் சினமா பற்றி பேசிய மிக நுணுக்கமான விஷயங்கள் அப்பப்பா…. உங்களுக்கும் எனக்கும் தெரிந்து இருக்குமா என்பது சந்தேகமே.

அப்படி என்ன பேசினோம்?
மகேனூக்கு பிடித்த.. சில தமிழ் படங்கள், மிக குறிப்பாக காக்க காக்க, பருத்தி வீரன், நகைச்சுவை நடிகர் – வடிவேலு, குறிப்பாக.. போலிஸ் வேடம அணிந்து அவர் செய்யும் பாடி லாங்வேஜ், தமிழ் சினிமாவின் அனைத்து தொழில் நுட்ப கலைநர்கள்… என இநத பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஒரு கட்டத்தில்.. மகேன்…தமிழ் சினிமா தான் தென் இந்திய சினிமாவிற்கு முன்னோடி என்றும்… மற்ற சினிமாக்கள்.. அங்கிருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் எராளம் என்றும் கூறிய போது… உளம் மகிழ்ந்தேன். அது உண்மை தான் எனினும், கன்னட சினிமாதுறையில் இருக்கும் ஒருவர் இந்த கருத்தை முன் வைக்கும் போது மகிழ்ச்சி இன்னும் பல மடங்கு கூடியது.

இதை எல்லாம் குறிப்பிட்ட… மகேன்.. கன்னட சினிமாவை பற்றி வருத்த படாமல் இல்லை. தன்னால் முடிந்த வரை, புகைபட துறையில் புதுமையை புகுத்தி கொண்டிருக்கும் அவருக்கு.. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்பொழுதும்…. என் உள்ளே… “தமிழ்ன்… என்று சொல்லடா… தலை நிமிரந்து நில்லடா…” வாழ்க தமிழ்.. வளர்க அதன் புகழ்.

Advertisements

~ by peeveeads on April 16, 2008.

2 Responses to “மகேன் (MahendraPhotography) பார்வையில் தமிழ் சினிமா…”

  1. படம் பட்டைய கெளப்புது!!
    மணிரதன்ம்றீங்க,காக்க காக்கன்றீங்க ,பெரிய பெரிய ஆளு கூட எல்லாம் தோள் மேல கை போட்டு பேசறிங்க….
    எங்கேயோஓஓஓஓஓஓஓ போய்ட்டு இருக்கீங்க அண்ணாச்சி!!!! B-)

  2. மிகச் சிறந்த முயற்ச்சி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: