அம்பது ரூபாய்க்கு என்ன கிடைக்கும்?
புத்தகம் – ஒரு பெட்டர் போட்டோகிராபி
சாக்லெட் – ஒரு டெம்ப்டேஷன்ஸ்.
வண்டிக்கு – ஒரு லிட்டர் பெட்ரோல்.
பேனா – ஒரு பார்க்க்ர் பேசிக் பேனா.
சினிமா – பெங்களூர் பாலாஜி தியேட்டரில் ஒரு டிக்கட்.
சிகரெட் – ஒரு பாக்கெட் கிங்ஸ்.
சரக்கு – ஒரு மினி பியர்.
சாப்பாடு – அது கட்டாயம்… காமத் லோக்குருச்சியில் ஒரு புல் மீல்ஸ்.
ம்… ரொம்ப நாளா காமத் லோக்குருச்சி பத்தி கேள்வி பட்டிருந்தாலும்… இன்னிக்கு தான்.. காமத் லோக்குருச்சியில் ஒரு புல் மீல்ஸ் சாப்பிடும் வாய்ப்பு கெடச்சது. பிரமாதம். அருமையான முழு சாப்பாடு.
தண்ணி வச்சி இலைய போட்டு.. கூடவே ஒரு டம்ளர் மோரும் கொடுத்தான். பிறகு.. மூணு விதமான பொரியல்… நல்லா ஊறின எலுமிச்சை ஊறுகாய்… உப்பு எல்லாம் வச்சு சோறு கொண்டு வந்தான். மொத்தாமா மூணு ரவுண்டு சாப்பாடு வாங்கி மூக்கு பிடிக்க சாம்பார், ரசம், தயிர் எல்லாம் சாப்பிட்டேன். வயித்தில் கொஞ்சம் காலி இடம் இருந்ததால், இன்னும் ஒரு டம்ளர் மோர் வாங்கி குடிச்சிட்டு… ஒரு வாழை பழத்தையும் உள்ளே அனுப்பினேன். நான் கடந்த 13 வருஷமா ஹாஸ்டல்.. மெஸ்.. ஹோட்டல்னு மாத்தி மாத்தி சாப்ட்டு.. நாக்கு செத்து போய் இருக்கறதால.. இப்படி ஏதாவது ஒரு நாள் நல்ல சாப்பாடு கெடச்சா..வெளுத்து வாங்க வேண்டியதுதான்.
நண்பர் ஒருவர் எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு… நன்றி வினாயக்.

சரி… என்னோட கதைய விடுங்க.. மைசூர் ரோடு பக்கம் போனா… ராமநகரா டவுன் தாண்டி, 2 கி.மி தூரத்துல இருக்கற காமத் லோக்குருச்சி ஹோட்டல் போய் சாப்பிட்டு… என்ஜாய் பண்ணுங்க.
நீங்களும்… அம்பது ரூபாய்க்கு வேற என்ன எல்லாம் கிடைக்கும்னு எழுதலாம்.
~ பெ வெ.(peevee)


Leave a Reply