கொடைக்கானல் – ஒரு முன்னோட்டம்
நீண்ட நாட்களாக தள்ளி வைக்கப்பட்ட எங்களுடைய கொடைக்கானல் பயணம், சென்ற வாரத்தின் கடைசி மூன்று நாட்களில் நிறைவேறியது. இங்கே முன்னோட்டம். விரைவில் வரும் முழு பின்னோட்டம்.
நாள் ஒன்று –
ஒன்பது மணி நேர பேருந்து பயணம். கொடை ரோடு. மூன்று மணி நேர கார் பயணம். கொடைக்கானல். சில்லிப்பான காற்று. வெள்ளி நீர்வீழ்ச்சி. சூடான பஜ்ஜி. மதிய உணவு. இன்னும் சில நீர்விழ்ச்சிகள். சிங்க குகை. நடை. ஓட்டம். டால்பின் நோஸ். எக்கோ பாயிண்ட். மசாலா தேநீர். சாலத் தேவாலயம். அண்ணா சாலையில் நடை. அன்னபூர்ணாவில் இரவு உணவு. நல்ல உறக்கம்.
நாள் இரண்டு -
சூரிய உதயம். குறிஞ்சி ஆண்டவர் கோயில். சூடான இட்லி உணவு. கோக்கர்ஸ் வாக். பனி மூட்டம். குணா குகை. பைன் காடுகள். பாண்டியன் மெஸ் மதிய உணவு. பூம்பாரை கிராமம். விவசாயம். அழகான குழந்தைகள். முருகன் கோயில். மீண்டும் கொடைக்கானல். ஏரி. குதிரை சவாரி. மிதிவண்டி. இரவு உணவு. மீண்டும் உறக்கம்.
நாள் மூன்று –
சூரிய உதயம். மீண்டும் குறிஞ்சி ஆண்டவர் கோயில். சூடான இட்லி வடை உடன் காலை உணவு. செட்டியார் பூங்கா. விளையாட்டு. வெல்கம் ல் அருமையான மதிய உணவு. மலை வழி பயணம். சில்லிப்பான காற்று. வத்தலகுண்டு. வாடிபட்டி வழியாக மதுரை. மீனாட்சி கோயில். முருகன் இட்லி கடையில் இரவு உணவு. KSRTC பேருந்து நிறுத்தம். பத்து மணி நேர பயணம். ஓசூர். அத்திபள்ளி. பெங்களூரு. வீடு. வேலை.
முழு விபரம் விரைவில்.
~ பீவீ. (peevee – பெ.வெ)



Great pics!
Seems like you guys had a gala time!
Rock on! B-)